அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அதிமுக மகளிர் அணியினர் தங்களுக்குள்ளேயே சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் பரபப்பாகக் காணப்படுகின்றது. ஆங்காங்கே உட்கட்சி சீட் கேட்டு முந்தி அடிக்கும் கோஷ்டுகளும் மோதல்களும் என்று நாள்தோறு பல்வேறு காட்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் கனகலட்சுமி (40) நேற்று மாலை தனது ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் விருகம்பாக்கம் அதிமுக மகளிரணி நிர்வாகி ஷகிலா மற்றும் மதுரவாயில் அதிமுக நிர்வாகி மஞ்சுளா உள்ளிட்டோர்,ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்காக சென்றுள்ளனர்.அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு அதிமுக மகளிர் அணி நிர்வாகி கனகலட்சுமி, 'தற்போது ஓ பன்னீர்செல்வத்தை நீங்கள் சந்திக்க அனுமதி இல்லை' என்று தெரிவித்து உள்ளார்.
இதனால் இந்த மூன்று பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக அரங்கேறியது.இரண்டு தரப்புகளும் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி முடியை பிடித்து அடித்துக் கொண்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செங்கல்பட்டு நிர்வாகி கனகலட்சுமி, அபிராமபுரம் காவல் நிலையத்தில் தான் தாக்கப்பட்டது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார்.
