அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் மகனுமான இராஜேந்திரகுமார் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் மகனுமான இராஜேந்திரகுமார் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் தற்போதில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கூட்டணி மற்றம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்னை தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் - இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். அவர்களின் மகனுமான இராஜேந்திரகுமார் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் முனைவர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., ஆ.இராசா, எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 24, 2020, 3:48 PM IST