Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள்.. பெருமைப்படுத்தியதாக நன்றி சொன்ன அதிமுக மாஜி எம்.பி. மைத்ரேயன்!

மகாகவி பாரதியரை கெளரவப்படுத்தி 14 அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன் நன்றி தெரிவித்துள்ளார். 
 

AIADMK Ex MP Maitreyan announce Big thanks to Chief Minister MK Stalin!
Author
Chennai, First Published Sep 11, 2021, 9:01 AM IST

இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவருடைய பதிவில், “'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா ' என்று பாடி தமிழ் மொழியின் சிறப்பினைப் போற்றியவர் மகாகவி பாரதியார். நாட்டு மக்கள் அறியாமையாலும், சாதி வேறுபாடுகளாலும், பெண்ணடிமைத்தன்மையாலும் வருந்தும் இந்த சமுதாயத்தைக் கண்டு கொதித்து எழுந்த பாரதி, ' மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் ' எனப் பெண் உரிமை பேசினார்.AIADMK Ex MP Maitreyan announce Big thanks to Chief Minister MK Stalin!

' ஆயிரந்தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் ' என்று மதவெறியைச் சாடினார் பாரதி. அவருடைய புரட்சிக் கருத்துக்கள் தமிழர் இதயத்தை சிந்திக்க வைத்தது. தேசப்பற்று கொண்ட பாரதி, ' சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடி வருவோம் ' என்று பாடினார். மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும் உணர்த்தும் பாரதியாரை கௌரவிக்கும் வகையில், அவரது நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள் ‘மகாகவி’ நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று  தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கது.

 AIADMK Ex MP Maitreyan announce Big thanks to Chief Minister MK Stalin!
இதுதவிர, மகாகவி பாரதியாரை பெருமைப்படுத்தி கௌரவிக்கும் வகையில் பதினான்கு அறிவிப்புகள் முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளதை மனதாரப் பாராட்டுகிறேன். இந்த அறிவிப்புகளை மனதார வரவேற்பதோடு, இதற்குக் காரணமான முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios