Asianet News TamilAsianet News Tamil

Thangamani Raid: சரி அடிக்கடி ரெய்டு நடத்துவது நீதிக்காகவா? பீதிக்காகவா? திமுகவை சைலண்டாக வாரும் கமல்ஹாசன்.!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, கடந்த ஆட்சியில் ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடு மற்றும் அவரது அலுவலகம், உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. 

aiadmk ex-ministers raid issue... Kamal Haasan Attack to dmk government
Author
Tamil Nadu, First Published Dec 16, 2021, 6:39 AM IST

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடிக்கடி ரெய்டு நடக்கிறது. ரெய்டு, நீதியை நிலைநாட்டவா அல்லது அவர்களை பீதியில் வைத்திருக்கவா என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, கடந்த ஆட்சியில் ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடு மற்றும் அவரது அலுவலகம், உறவினர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இவர்கள் மீது அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

aiadmk ex-ministers raid issue... Kamal Haasan Attack to dmk government

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான தங்கமணி பள்ளிபாளையம் அருகேயுள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகவும், முறைகேடுகள் மூலம் சொத்து சேர்த்ததாக புகார்கள் வெளியானது. 

aiadmk ex-ministers raid issue... Kamal Haasan Attack to dmk government

இதனையடுத்து, தங்கமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் நாமக்கல் மாவட்டம் -33 , சென்னை -14 , ஈரோடு -8 , சேலம் -4 , கோயம்புத்தூர் -2 , கரூர் -2 , கிருஷ்ணகிரி- 1 , வேலூர் -1 , திருப்பூர் -1 , பெங்களுர் -2 , ஆந்திர மாநிலம் சித்தூர் - 1 உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் 150க்கும் அதிமான அதிகாரிகள் ஈடுபட்டனர்.

aiadmk ex-ministers raid issue... Kamal Haasan Attack to dmk government

மேலும் சட்ட விரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2,37,34,458 பணம், 1.130 கிலோ கிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத ரூ.2,16,37,000 பணம், சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊழலால் சொத்துகுவித்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடிக்கடி ரெய்டு நடக்கிறது. ரெய்டு, நீதியை நிலைநாட்டவா அல்லது அவர்களை பீதியில் வைத்திருக்கவா என்பதை தொடர்நடவடிக்கை மூலம்தான் அறியமுடியும். ஊழலால் சொத்துகுவித்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்த அரசு தன்னை நிரூபிக்கவேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios