இன்று தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயண்ட் மூவியை சுற்றி சுழல்கிறது. திரையுலகத்தின் கதாநாயகன் சட்டமன்றத்தில் இருக்கின்றார்’ என்று சரமாரியாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.

தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ தமிழகத்தில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு மக்கள் சட்டமன்றத்திலும், நகர மன்ற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவிற்கு வாக்களித்ததற்கு பரிசுகள் வழங்கி உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை கலவரத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அரசுக்கு வெட்கி தலைகுணியே வேண்டிய விஷயம் ஆகும். அமைச்சர் எ.வ வேலு செய்தியாளர்களை சந்திக்கும்போது, இந்த கலவரத்தில் ஒருவரும் உயிர் சேதம் ஏற்படவில்லை என கூறிய கருத்திற்கு இன்னும் இந்த கலவரம் அவருக்கு போதாதா ? கலவரத்தை அவர் பாராட்டுகிறாரா ? என்று கேள்வி எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்

இலங்கையில் நடைபெற்ற புரட்சி போல் விரைவில் தமிழகத்திலும் திமுக ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சி வெடிக்கும். தமிழகத்தில் கடந்த 10ஆண்டு காலமாக சுதந்திரமாக சினிமாதுறை இயங்கி வந்தது. அதிமுக ஆட்சியில் 2017ல் இருந்து தொடர்ந்து ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்கள் கோவாவில் நடைபெற்ற இண்டெர்நேஷனல் சர்வதேச திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் திரைப்படங்கள் வெளியிடும் சூழ்நிலை இருந்தது.

ஆனால், இன்று தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயண்ட் மூவியை சுற்றி சுழல்கிறது. திரையுலகத்தின் கதாநாயகன் சட்டமன்றத்தில் இருக்கின்றார். அவரது கட்டுபாட்டில் தான் சினிமாதுறை உள்ளது. சினிமா துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தில் திரைத்துறை அழிவை நோக்கி செல்கின்றது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்