தஞ்சாவூரில் விபத்துள்ளானது தேரே இல்லை..! அமைச்சர் சேகர்பாபு சொன்ன அதிர்ச்சி தகவல்..

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சித்திரை திருவிழா மற்றும் தஞ்சை களிமேடு கோயிலில் மின் விபத்து ஆகியவற்றில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென குற்றம்சாட்டினார். இதன் காரணமாகத்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.


 

AIADMK draws attention to Thanjavur temple accident AIADMK expelled from the Assembly

கோயில் விபத்து- சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை மாவட்டம்  களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்திற்கான கோயில் திருவிழாவில் தேர் மீது மின்கம்பி உரசியதில் 11 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சித்திரை திருவிழா மற்றும் தஞ்சை அப்பர் மட கோயில் விழாக்களில்  தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறினார்.தேர் திருவிழா என்றால் மின்சாரம் நிறுத்தபட வேண்டும், சாலைகள் முழுமையாக செப்பனிட பட்டிருக்க வேண்டும். ஆனால் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றபடவில்லை என தெரிகிறது.எனவே இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது. இது போதாது ரூ.25லட்சம் நிவாரணம் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனக்கூறி வெளிநடப்பு செய்தார்.  இதனை தொடர்ந்து  பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  என்ன நடந்தது என்பதை தெரியாமலேயே அதிமுக வெளிநடப்பு செய்கிறது. அது தேர் அல்ல அது சப்பரம். திருவிழாவை ஊர் கிராம மக்களே ஒன்று கூடிய நடத்தியுள்ளனர். மேலும், இது குறித்து அரசுக்கு எந்த தகவலுமே தெரிவிக்கவில்லை என கூறினார்.

AIADMK draws attention to Thanjavur temple accident AIADMK expelled from the Assembly

தேர் இல்லை- சப்பரம்

 வெளிநடப்பு செய்த பின்னர் மீண்டும் அவைக்கு திரும்பிய அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் தஞ்சை தீ விபத்து குறித்து பேச அனுமதி கேட்டனர் இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். இதனைதொடர்ந்து அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.   இறந்த 11 பேரின் உடல்கள் இன்னும் அடக்கம் கூட செய்யப்படவில்லை, இதை வைத்து அரசியல் செய்வது நல்லது அல்ல, நாட்டுமக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர் என்று அதிமுகவை விமர்சித்து அமைச்சர் சேகர்பாபு பேசினார். மகாமத்தின் போது ஏற்பட்ட விபத்து குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  சட்டப்பேரவையில் பேசிய விவரங்களை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை பேசினார். இதை அவை குறிப்பிலிருந்து நீக்க கோரி...எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவையில் பேச முற்பட்டார் , பேரவை தலைவர் அனுமதி மறுக்கவே பேரவை உள்ளேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அவையில் கடும் கூச்சல் குழப்பும் ஏற்பட்டது.  அவையில் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று தொடந்து கோஷம் எழுப்பினர். 

AIADMK draws attention to Thanjavur temple accident AIADMK expelled from the Assembly

அதிமுக வெளியேற்றம்

 இதனையடுத்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த காரணத்தால் அதிமுகவினரை அவைக் காவலர்களை அழைத்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு பேசுகையில், அதிமுக கவன ஈர்ப்பில் பேசிய பின் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை பேசினார். அதில் மகாமகம் குறித்து பேசினார். இதில், யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அதை நீக்க வேண்டி அதிமுக வினர் வலியுறுத்தினர். உறுப்பினர்கள் பேசி முடிந்த பின் வாய்ப்பு தருகிறேன் என தெரிவித்தேன். ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்து விட்டு மீண்டும் வந்து பேச வாய்ப்பு கேட்பது எந்த வகையில் நியாயம் என  சபாநாயகர் கேள்வி எழுப்பினார். இதனிடையே தஞ்சை தேர்  விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios