Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்... இப்தார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்பு... எடப்பாடி புறக்கணிப்பு..!

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி புறக்கணித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

AIADMK clash
Author
Tamil Nadu, First Published Jun 4, 2019, 6:06 PM IST

சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நடத்திய இப்தார் நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி புறக்கணித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. AIADMK clash

ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நந்தபாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்படுவது வழக்கம். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த நிகழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவரின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. AIADMK clash

 இந்நிலையில் இந்த விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. இதற்காக கிண்டி கத்திப்பாராவில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரை வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல்வரை வரவேற்க அதிமுகவினர் ஏராளமானோர் வழிநெடுகிலும் காத்திருந்தனர். போலீசாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் முதல்வர் விழாவில் பங்கேற்கவில்லை. இது, சிறுபான்மையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

AIADMK clash

பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ராமதாஸ், ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர் கலந்து கொண்டனர். இதில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி-யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்காததால், அவரின் ஆதரவாளர்கள் பலர் வரவில்லை. இதனால் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios