Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் முற்றும் மோதல்... எடப்பாடியிடம் புலம்பித் தள்ளிய மதுசூதனன்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக அவைத்தலைவர் திடீரென சந்தித்து பேசியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி-பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையே மீண்டும் பகிரங்க மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

AIADMK clash...madhusudhanan murmering with Chief Minister Edappadi palanisamy
Author
Chennai, First Published Aug 28, 2018, 5:56 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக அவைத்தலைவர் திடீரென சந்தித்து பேசியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி-பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையே மீண்டும் பகிரங்க மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. AIADMK clash...madhusudhanan murmering with Chief Minister Edappadi palanisamy

கட்சியின் உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்பது பன்னீர்செல்வம் தரப்பின் ஆதங்கம். ஆட்சி, கட்சி இரண்டிலுமே பழனிச்சாமியின் ஆதிக்கமே மேலோங்கி இருப்பதால் பன்னீர் தரப்பு செயல்பட முடியவில்லை என்ற புகாரும் நிலவி வருகிறது. இதுமட்டுமின்றி மீனவர் சங்கத் தேர்தலிலும் அமைச்சர் ஜெயக்குமார், மதுசூதனன் தரப்பினருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. AIADMK clash...madhusudhanan murmering with Chief Minister Edappadi palanisamy

இதுகுறித்து எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனான சந்திப்பின் போது மதுசூதனன் நேரில் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி-பன்னீர் அணிகள் இணைந்த போது திட்டமிட்ட கட்சியின் வழிகாட்டுதல் குழுவை அமைக்க எடப்பாடி தரப்பு ஆர்வம் காட்டாததும் ஓபிஎஸ் அணியினரின் அதிருப்திக்கு காரணம். 

AIADMK clash...madhusudhanan murmering with Chief Minister Edappadi palanisamyஇதன் எதிரொலியாகவே அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் துணை முதல்வர் பதவியை துறக்க தயார் என்றும் பன்னீர் செல்வம் பேசியதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios