அதிமுகவில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி சின்னசாமி செயல்பட்டதாக அதிமுக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். 

அதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவான அண்ணா தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளராக கடந்த சில ஆண்டுகளாகப் சின்னசாமி பதவி வகித்து வந்தவர். இவர் கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும் சங்கத்தின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். அவர் பதவி வகித்த காலத்தில் சங்க நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக கூறி அதிமுக தலைமை அவரைக் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் நீக்கியது. இதனையடுத்து அவர் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணியில் இணைந்தார்.

 

இந்நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி பதவி வகித்த காலத்தில் ரூ. 6 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடைபெற்று இருப்பது அம்பலமானது. இதையடுத்து, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் சென்னை மத்திய குற்றப் பிரிவு மோசடி தடுப்பு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த சென்னை சின்னசாமியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.