அதிமுகவில் எழும் பிரச்னைகளை தடுக்க ஊடக விவாதங்களில் கட்சியினர் கலந்து கொள்ளக் கூடாது என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக சார்பில் பத்திரிக்கைகள் மற்றும், ஊடகங்கள் வழையாகவும், இன்னபிற சமூக தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துக்களை தெரிவிக்கும் பணிக்கென கழக செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கழக செய்தி தொடர்பாளர்கள் நெந்த ஒரு விவகாரத்திலும் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதையும்  அதிமுகவின் சிந்தனை ஓட்டம் எத்தகையது எனதையும் அதிமுக நிர்வாகிகள் ஒப்புதலை பெற்று கருத்துக்களை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள்  தொடங்கி இருக்கும் இந்த வேளையில் கழக செய்தித் தொடர்பாளர்கள் தலைமை கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரையில் எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிக்கைகளிலும் சமூக தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும், தெரிவிக்க வேண்டாம்.

 

மற்றவர்கள் யாரும் பத்திரிக்கைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத்தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துக்களை  அதிமுகவின் கருத்துக்களாக தெரிவிக்கக்கூடாது, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதிமுகவினர், அதிமுக ஆதரவாளர்கள் என்ற பெயரில் தனி நபர்களை அழைத்து அதிமுகவில் பிரதிநிதிகள் போல சித்தரித்து அவர்களை அதிமுக சார்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடக மற்றும் பத்திரிக்கைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்’’ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா காலத்தில் அவரை மீறி கட்சி பற்றி யாரும் கருத்துக் கூற முடியாத நிலை இருந்தது. அதே நிலை அதிமுக உத்தரவிட்டும் தொடருமா? எனக் கேள்வி எழுந்துள்ளது.