Asianet News TamilAsianet News Tamil

அதிமுக முதல்வர் வேட்பாளாராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வுச் செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அறிவிப்பு: அதிரடி சரவெடி.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அறிவித்தார். அப்போது கட்சி தொண்டர்கள் அவரின் அறிவிப்புக்கு கைதட்டி ஆரவாரம் தெரிவித்தனர். 

AIADMK Chief Ministerial candidate Edappadi Palanichamy has been selected by the OPS: Action Saravedi.
Author
Chennai, First Published Oct 7, 2020, 10:12 AM IST

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளார். இதனால் அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. 

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது, சட்டமன்ற தேர்தலேயும் தாண்டி அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதே மிகப் பெரிய கேள்விக் குறியாக இருந்து வந்தது இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில்,  தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக காரசாரமாக விவாதிக்கப்பட்டது, அதில் இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே அப்போது காரசார வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து (இன்று) மே-7 ஆம் தேதி அன்று முறைப்படி அறிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி அறிவித்தார்.

AIADMK Chief Ministerial candidate Edappadi Palanichamy has been selected by the OPS: Action Saravedi.

நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், கட்சியின் பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கலாம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது. அதேபோன்று ஓபிஎஸ் தரப்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை முதலில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் இரு தலைமைகளை கலைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளராக  தான் மட்டுமே தொடர வேண்டுமென ஓபிஎஸ் சொல்லி விட்டதாகவும் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுக்  கொடுக்க தயார் ஆனால் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை கண்டிப்பாக அமைக்க வேண்டும்  என்பதில் ஓபிஎஸ் திட்டவட்டமாக இருந்து வந்துள்ளார். அதிமுகவில் 11 பேர் கொண்ட குழு அமைக்க இரு தரப்பிலும் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. 

AIADMK Chief Ministerial candidate Edappadi Palanichamy has been selected by the OPS: Action Saravedi.

இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் அவரது ஆதரவாளர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று 11 பேர் கொண்ட  வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று  ஓபிஎஸ் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அறிவித்தார். அப்போது கட்சி தொண்டர்கள் அவரின் அறிவிப்புக்கு கைதட்டி ஆரவாரம் தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios