அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை துணை முதல்வர் ஓ.பிஎ.ஸ் ஏக மனதாக அறிவித்துள்ளார்.  

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தலைமையின் கீழ் 2021 சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதனை துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் புலிவேஷம் கட்டி ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அப்போது பேசிய ஓ.பி.எஸ், கட்சிக்கு ஒது குண்டுமணி அளவுக்கு கூட பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கழகம் இது. வெற்றி ஒன்றே நோக்கம்’’என அவர் தெரிவித்தார்.