Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போடி அதிமுக தொண்டர்கள் ஆர்பாட்டம்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். வரும் 1-7-2022 காலை 10 மணிக்கு போடியில் தேவர் சிலை முன்பு அதிமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

AIADMK cadres protest against Edappadi Palanichamy .. OPS started the game.
Author
Chennai, First Published Jun 30, 2022, 7:15 PM IST

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என  ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். வரும் 1-7-2022 காலை 10 மணிக்கு போடியில் தேவர் சிலை முன்பு அதிமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை முழக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஒற்றைத் தலைமை முழக்கத்தை வைத்து வருகின்றனர். இரட்டை தலைமையே நீடிக்கவேண்டுமென்றும், ஒற்றைத் தலைமைக்கு அவசியமில்லை என்றும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான  ஏற்பாடுகளில் எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக இருந்து வருகின்றனர்.  கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அவர் பொதுச்செயலராக நியமிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நீதிமன்ற உத்தரவால் அது தடைப்பட்டது.

AIADMK cadres protest against Edappadi Palanichamy .. OPS started the game.

இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவமதிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நடந்து கொண்டனர். அவர் மேடையில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு எதிராக எடப்பாடிக்கு ஆதரவான பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் பன்னீர்செல்வம் மீது  பாட்டில் வீசப்பட்டது. அதேபோல் பொதுக்குழு ஒருதலைபட்சமாக நடைபெறுவதாகக் கூறி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பொதுக்குழுவுக்கு பன்னீர்செல்வம் வந்த வாகனமும் அங்கிருந்து  வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டது.  பொதுக்குழுவுக்கு வரவழைத்து ஓ பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்திவிட்டனர் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். அப்போதுகுழுவுக்குப் பின்னர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருதரப்பு ஆதரவாளர்களும் தங்களது தலைவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அன்று முதல் இன்று வரை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

AIADMK cadres protest against Edappadi Palanichamy .. OPS started the game.

நேற்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்தை அவமதித்த சி.வி. சண்முகம், கே.பி முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை கண்டித்து முழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போடி நகர அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். ஆஇஅதிமுகவில் எதிர்காலத்தை அழிக்க வந்த சர்வாதிகாரி எடப்பாடி கே. பழனிச்சாமியை கண்டித்து போடி நகர் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் பதிவாகி வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios