Asianet News TamilAsianet News Tamil

வருகிறது இடைத்தேர்தல் ...! அஇஅதிமுக பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி..!

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுனான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி கிளப்பி உள்ளது அதிமுக.

aiadmk announced election comittee member for
Author
Chennai, First Published Oct 29, 2018, 2:19 PM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுனான இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து அதிரடி கிளப்பி உள்ளது அதிமுக.

தினகரனுக்கு ஆதரவாக களத்தில் குதித்து  இபிஎஸ்- ஐ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியதால் 18 MLA- க்கள் பதவியை இழந்தனர்.இந்த நிலையில், ஓபிஎஸ்,எடப்பாடி தலைமையில், இன்று அஇஅதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

அப்போது, காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான, பொறுப்பாளர்களை நியமித்து ஒரு கை பார்த்து விடுவது என முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில், தங்கத் தமிழ் செல்வனால் காலியாகி போன ஆண்டிபட்டி தொகுதிக்கு ஓ. பன்னீர் செலவம், திண்டுக்கல் சீனிவாசன், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களும், இதே போன்று கதிர் காமு எம்எல்ஏ -வாக இருந்த பெரிய குளம் தொகுதிக்கும், பன்னீர் செல்வம் தலைமையில்  குழு அமைக்கப்பட்டு உள்ளது.

aiadmk announced election comittee member for

வெற்றிவேல் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற பெரம்பூர் தொகுதிக்கு, அவருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்  அமைச்சர் டி. ஜெயகுமார், மது சூதனன், உடுமலை ராதா கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தஞ்சாவூர் தொகுதியை பொறுத்தவரை ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது. இங்கு  வைத்தியலிங்கம் எம். பி, அமைச்சர் துரைக்கண்ணு, அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோர் பொறுப்பாளர்களாக
நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியை பொறுத்தவரை அமைச்சர்கள் கே.பி அன்பழகன், வி.சரோஜா, கே.சி கருபண்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

செந்தில் பாலாஜியின் தொகுதியான அரவக்குறிச்சியில் மூ. தம்பிதுரை போக்குவரத்து அமைச்சர் விஜய பாஸ்கர், வெல்ல மண்டி நடராஜன் ஆகியோரும் நிலக்கோட்டை தொகுதிக்கு திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நாதம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டு உள்ளனர் 

இதே போன்று, மானாமதுரைக்கு கே.ஏ செங்கோட்டையன் தலைமையிலும், குடியாத்தத்திற்கு பி.தங்கமணி  தலைமையிலும் விளாத்திகுலத்திற்கு எஸ்.பி வேலுமணி தலைமையிலும் குலுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

aiadmk announced election comittee member for

சென்னையை அடுத்த திருப்போரூர் தொகுதிக்கு சி.வி சண்முகமும், சாத்தூர் தொகுதிக்கு தளவாய் சுந்தரம் ,திருபரங்குன்றத்திற்கு செல்லூர் ராஜு, ஆர்.பி உதய குமார் ஆகியோர் இடைதேர்தல் பொறுப்பாளர்களாக  நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பழனியப்பனின் பாப்பிரெட்டி தொகுதிக்கு அவரது அரசியல் எதிரியான அமைச்சர் கே.பி அனபழகனை  நியமிக்கப்பட்டு உள்ளார். ஜி. பார்த்திபன் போட்டியில் வெற்றி பெற்ற தொகுதியான சொளிங்கருக்கு எம்.சி  சம்பத் பாலகிருஷன் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் 

கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு உணவு துறை அமைச்சர் காமராஜும் , ஓட்டப்பிடாரத்திற்கு கடம்பூர் ராஜும், பூந்தமல்லி தொகுதிக்கு அமைச்சர் பெஞ்சமினும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios