TTV Dhinakaran: அதிமுக - அமமுக இணைப்பா? டி.டி.வி தினகரன் கூறும் பரபரப்பு தகவல்.!
நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளன. காலம், சரியான நிலையை உருவாக்கும். மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்து எனக்கு ஆரூடம் சொல்ல தெரியாது. வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்கலாம்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தையடுத்து அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற அமமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தையடுத்து அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சிக்கு ஒரே தலைமை என்ற நிலைப்பாட்டில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்துள்ளதாக தெரிகிறது. சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க தேனியில் ஓபிஎஸ் தலையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தேனியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது சுய பரிசோதனையின் தொடர்ச்சியாக இருக்கலாம். ஒட்டுமொத்தமாக, அக்கட்சி ஒருமித்த கருத்தாக முடிவெடுத்து தெரிவித்த பிறகுதான், பதில் தெரிவிக்க முடியும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன் என்றார். அதிமுக, அமமுக இணையுமா? என்பதற்கு இப்போது எந்த கருத்தையும் கூற முடியாது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளன. காலம், சரியான நிலையை உருவாக்கும். மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு குறித்து எனக்கு ஆரூடம் சொல்ல தெரியாது. வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்கலாம். உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள தமிழக மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும், பாதுகாப்பாக மீட்டு, உயிர் சேதம் இல்லாமல் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.