Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவால் ஒன்றும் பண்ண முடியாது.. அதிமுக-அமமுக இணைய 100% வாய்ப்பில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்..!

இரட்டை இலை மற்றும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட அமமுகவை எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

AIADMK AMMK join not internet is not possible...minister jayakumar
Author
Chennai, First Published Feb 3, 2021, 5:06 PM IST

இரட்டை இலை மற்றும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட அமமுகவை எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற பலரின் கோரிக்கையை நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்கட்ட பணிகள் முடிந்ததும், முதல்வர் திறந்துவைத்தார். தற்போது 2ம் கட்ட பணிகள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் சென்றுவந்தால், இடையூறு ஏற்படும். இதனாலேயே நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளார். 

AIADMK AMMK join not internet is not possible...minister jayakumar

மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுகவையும் எதிர்த்து போட்டியிட்ட அமமுக, இப்போது அதிமுகவை கைப்பற்ற நினைப்பதை எந்த தொண்டரும் ஏற்க மாட்டார்கள். முதல்வர் கூறியது போல, அதிமுக - அமமுக இணைய 100 சதவீதம் வாய்ப்பில்லை. சசிகலா வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது. 

AIADMK AMMK join not internet is not possible...minister jayakumar

அமமுக கட்சி ஆரம்பித்து 3 சதவீத ஓட்டு பலத்தை வைத்திருந்தனர். இப்போது அதுவும் கீழிறங்கியுள்ளது. அதிமுகவில் உறுப்பினராக இல்லாத தினகரன், சசிகலா ஆகியோர் எப்படி அதிமுகவிற்கு உரிமை கோர முடியும்? தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக ஆட்சியே இன்னும் 100 ஆண்டுகளுக்கு தொடரும் என கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios