அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும்.! 40 தொகுதிகளும் எங்களுக்குத்தான்! எடப்பாடி பழனிசாமி.!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும். 

AIADMK alliance will win all 40 seats... Edappadi palanisamy tvk

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை இந்த விடியா திமுக அரசு முறையாக கையாளவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி, முன்னாள் எம்எல்ஏ-வும், வடக்கு மாவட்ட அவைத் தலைவருமான பிரின்ஸ் எம். தங்கவேல் கடந்த 17 ஆம் தேதி மாரடைப்பால் காலமானர். இவரது திருவுருவ படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்தது. ஆனால், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை இந்த விடியா திமுக அரசு முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டினார். 

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும். முன்னெச்சரிக்கை எடுக்கப்படாததால் மனித உயிர்கள், கால்நடைகளை இழந்துள்ளனர். விவசாயமும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் திமுக ஆட்சியை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கிறது. பத்திரிக்கை, ஊடகங்கள் உண்மையான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என கூறினார்.  

இதையும் படிங்க;- கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. அடேங்கப்பா இவ்வளவு சிறப்பு அம்சம் இருக்கா!

தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதனை கருத்தில் கொள்ளாமல், இந்தியா கூட்டணியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்று விட்டார். திருச்சி முக்கொம்பு மழை வெள்ளம் காரணமாக கொள்ளிடம் பாலம் இடிந்தது. எனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக பாலம் திறப்பு விழா நடைபெறவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios