Asianet News TamilAsianet News Tamil

16 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு ஆப்பு... ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி முடிவு..!

அதிமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் கண்டு களை எடுக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

aiadmk 16 District Secretaries dismissed...edappadi palanisamy action
Author
Tamil Nadu, First Published Sep 13, 2019, 10:34 AM IST

அதிமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள் அடையாளம் கண்டு களை எடுக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கூட எடப்பாடியால் ஜீரனித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இடைத்தேர்தல் தோல்வியை அவரால் ஏற்கவே முடியவில்லை என்கிறார்கள். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தல் விவகாரங்களை கவனிக்க தனிப்பிரிவையே நடத்தி வந்தார். 

aiadmk 16 District Secretaries dismissed...edappadi palanisamy action

அவர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையானவற்றை கச்சிதமாக செய்து கொடுத்தனர். அப்படி இருந்தும் 13 தொகுதிகளில் தோல்வி என்பதை எடப்பாடியால் ஏற்க முடியவில்லை. இதற்கு காரணம் அந்தந்த தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக இருந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தான் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். இதேபோல் சில மாவட்டச் செயலாளர்கள் கட்சிக்கு மாதம் மாதம் கொடுக்க வேண்டிய விஷயத்தை சரியாக கொடுப்பதில்லை என்று நீண்ட நாட்களாக புகார் உள்ளது. aiadmk 16 District Secretaries dismissed...edappadi palanisamy action

மேலும் கட்சிக்காரர்களை விட்டுவிட்டு வேறு கட்சிக்காரர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மூலமாக கான்ட்ராக் சென்ற விஷயமும் எடப்பாடி டேபிளுக்கு வந்துள்ளது. இதேபோல் ஓபிஎஸ் தரப்பும் சில மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளதாக சொல்கிறார்கள்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓபிஎஸ் சென்ற போது மிகவும் மோசமாக ஏற்பாடுகளை செய்த சிலர் மீது ஓபிஎஸ் கோபத்தில் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஒரு சில இடங்களில் தொண்டர்களே இல்லாமல் ஓபிஎஸ் பிரச்சாரத்தையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. அந்த பகுதி பொறுப்பாளர்களுக்கு கல்தா கொடுக்க ஓபிஎஸ் அப்போதே முடிவு செய்திருந்தார்.

இதேபோல் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் தொண்டர்கள் பலர் கொந்தளிப்பாக உள்ளனர். இப்படி கட்சிக்க புதியவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போஸ்டிங் போட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலையும் உளவுத்துறை மூலம் எடப்பாடி கையில் எடுத்துள்ளார்.

 aiadmk 16 District Secretaries dismissed...edappadi palanisamy action

விரைவில் பொதுக்குழு கூட உள்ள நிலையில் அது முடிந்த பிறகு மாவட்டச் செயலாளர்கள் சுமார் 16 பேருக்கு கல்தா கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதே போல் திமுக மற்றும் தினகரன் கட்சியில் இருந்து சிலரை தூக்கி வந்து அதிமுகவில் பதவி கொடுக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எல்லாம் சரியாக அமைந்தால் தீபாவளிக்கு பிறகு அதிமுகவில் ஒரு மிகப்பெரிய நிர்வாகிகள் மாற்றம் நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios