கமல் துவங்கியிருக்கிற இயக்கம் அரசியலை மையமாக வைத்து அல்ல, மக்களை மையமாக வைத்து துவங்கியிருக்கிறார் என விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடையில் தமது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மக்கள் நீதி இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயக சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக பேசிய நடிகர் கமல் நான் தலைவன் அல்ல, உங்கள் கருவி என தெரிவித்தார். மேலும் மக்க்கள்தான் தலைவர்கள் எனவும் குறிப்பிட்டார். 

அவரை தொடர்ந்து பேசிய விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கமல் துவங்கியிருக்கிற இயக்கம் அரசியலை மையமாக வைத்து அல்ல, மக்களை மையமாக வைத்து துவங்கியிருக்கிறார் என தெரிவித்தார். 

நீராதார உரிமை, மொழி, ஆகியவை பறிபோகிற நிலைமை தமிழகத்தில் நிலவி வருவதாகவும் மன நிறைவுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டார்.