தமிழன்-மார்வாடி இதில் யார் இந்து? இனியும் இந்து உரிமை என்றால் மார்வாடிக்கு உதவுகிறீர்கள் என அர்த்தம் என மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். 

இந்திய பாராளுமன்றத்துக்கு 2022-ம் ஆண்டுக்குள் ரூ. 20 ஆயிரம் கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த கட்டிடம் மக்களவை, மாநிலங்களவை என இரு சபையின் 900 எம்.பி.க்கள் அமர போதுமானதாகவும், 1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும் கட்டப்படுகிறது.

இந்த பாராளுமன்ற கட்டிடத்தை முக்கோண வடிவத்தில் கட்டி முடிப்பதற்கு குஜராத்தை சேர்ந்த எச்.எஸ்.பி. டிசைன் நிறுவனம் யோசனை தெரிவித்து இருக்கிறது. இந்த நிறுவனம் மாதிரி வரைபடம் ஒன்றையும் தயார் செய்து விட்டது. பாராளுமன்ற வளாகம் 13 ஏக்கரில் பிரமாண்டமானதாக அமையும். மத்திய அரசு செயலகங்கள் அமைந்துள்ள வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகள் அருங்காட்சியகங்களாக மாற்றப்படும். மத்திய அரசு செயலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என தெரிகிறது. இதுகுறித்து செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.

 

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மே -17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி தனது டவிட்டர் பக்கத்தில், ‘’பாஜக கட்டவிருக்கும் புதிய பாராளுமன்றம் உட்பட ரூ20,000 கோடி கட்டிடங்களின் வடிவமைப்பிற்கான ஒப்பந்தத்தை குஜராத்தின்  HCP Designs 229 கோடிக்கு பெற்றிருக்கிறது. தமிழன்-மார்வாடி இதில் யார் இந்து? இனியும் இந்து உரிமை என்றால் மார்வாடிக்கு உதவுகிறீர்கள் என அர்த்தம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.