கடந்த சில தினங்களுக்கு முன்பு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சசியை சந்திக்க சென்றது இளவரசியின் வாரிசுகளும் சசியின் அக்காள் மகன் தினகரனின் குடும்பமும். என்னதான் சசி ஜெயிலில் ஒருவருடமாக இருந்தாலும் தனது குடும்பத்தில் நடக்கும் சின்ன பிரச்சனையாக இருந்தாலும் சசியின் காதுக்கு வராமல் இருக்காது. அப்படி தான் இதுவரை நடந்திருக்கிறது. குடும்பம், தொழில், அரசியலைக் கண்காணித்து வருகிறார்.

சரி விஷயத்துக்கு வருவோம், சசிகலா ஜெயிலுக்கு சென்றதிலிருந்து தினகரனுக்கும் விவேக்குக்கும் அடிக்கடி  மோதல்கள் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் சசிகலா கணவர் நடராஜன், இளவரசி வாரிசுகளுக்கு எதிராக பேசி வருகிறார்.

அதேபோல, 'அம்மாவின் செல்லப்பிள்ளை' என்ற அடையாளத்தோடு அரசியலில் கால்பதிக்க அஸ்திவாரம் போடா இளவரசியில் வாரிசுகள் நினைக்கிறார்கள். இதை உணர்ந்து, பணத்தைக் கையாளும் அதிகாரத்தில் இருந்து விவேக்கை விலக்கிவைக்க நினைத்த தினகரன் முதலில் ஜெயாடிவியை முதலில் பறித்து தனது மனைவியிடமே கொடுத்திருக்கிறார். ஜெயா டி.வி-யின் அதிகாரபூர்வ சி.இ.ஓ-வாக இருந்தாலும், எந்த விஷயத்திலும் விவேக் தலையிடுவதில்லை. முழுக்க, அனுராதா கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது ஜெயா டி.வி.

ஜெயாடிவி தினகரனின் கட்டுப்பாட்டுக்குப் போன கடுப்பில் இருக்கிறார் விவேக். இந்த சூழல்களைப் பற்றியெல்லாம் பேசுவதற்குத்தான் நேற்று முன்தினம். தினகரன், விவேக் அவரது மனைவி கீர்த்தனா, இளவரசி மருமகன் ராஜராஜன், நடராஜன் சகோதார்கள் வழக்கறிஞர் அசோகன், ஜெயலலிதாவுக்கு உதவியாளராகவிருந்த கார்த்திக் ஆகிய பத்துபேர் சசிகலாவால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மதியம் 1.15 மணிக்குச் சிறைக்குள் சென்றவர்கள் ஒரு மணிநேரம் கழித்துதான் வெளியில் வந்தார்கள்.

உறவுகள் எல்லாரிடமும் நலம் விசாரித்த சசிகலா, அடுத்தபடியாக கணவர் நடராஜனின் சகோதரர்களிடம் சிலநிமிடங்கள் பேசியிருக்கிறார்.கார்த்திக்கிடமும் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தாராம் சசிகலா.கடைசியாகத்தான் விவேக் மற்றும் தினகரனிடம் தனித் தனியாக பேசியுள்ளார்.

இருவரும் தங்களது மன வருத்தங்கள் பற்றி சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின், ‘அனுராதா இனி தினகரனின் அரசியல் டூர் புரோகிராம்களுக்கு உதவியா இருக்கட்டும். அக்காவுடன் கட்சி ரூர் போகும்போது அனுவும் வந்திருப்பதால் அவர் அதை பண்ணட்டும்.

ஜெயா டிவி சேனல்களை விவேக் தொடர்ந்து கவனிக்கட்டும்’ என்றெல்லாம் சமாதானப் பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்தாராம் சசிகலா ஆனாலும் இன்னும் சமாதானம் ஆகாது விவேக் சசி மீது வருத்தத்தில் இருக்கிறாராம்.