திட்டமிட்டு ஒரு சமூகத்தையே சாதிவெறியர்களாகக் கொடூரமாகக் காட்ட முயல்வதும் நியாயமா? தெரியாமல் நடந்துவிட்டது என்பது வடிகட்டிய பொய்.
ஜெய் பீம் படத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை காலண்டரில் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை தற்போது வரை நீண்டுகொண்டே செல்கிறது. அதன் பிறகு அக்கினி கலசம் நீக்கப்பட்டு மஹாலட்சுமி காலண்டர் வைக்கப்பட்டது. 
அடுத்து இயக்குநர் த.செ.ஞானவேல், இந்த விஷயம் துரதிர்ஷ்டமாக நடந்து விட்டது. நாங்கள் கவனிக்கவில்லை. யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் காலண்டர் வைக்கவில்லை என விளக்கமளித்தார். ஆனாலும், சர்ச்சை ஓயவில்லை. இப்போது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஜெய்பீம் படத்தை அலசி ஆராய்ந்து அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் மேலும் ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’கதை அற்புதமானது அவசியமானது, ஆதிக்க அதிகார வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் அதைப் பேசுவதாகச் சொல்லித் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே சாதிவெறியர்களாகக் கொடூரமாகக் காட்ட முயல்வதும் நியாயமா? தெரியாமல் நடந்துவிட்டது என்பது வடிகட்டிய பொய்.
ஜெய் பீம் படத்தில் வரும் காலண்டர் கட்சிகள் சில. 34.15 நிமிடத்தில் இந்த நீதிமன்ற காட்சியில் வரும் காலெண்டர் "Bar Council Of Tamil Nadu And Puducherry" எனத் தெளிவாக உள்ளது. நீதிமன்ற வளாகம் எனவே Bar Council காலெண்டர் வைத்துள்ளனர். சரி. 1.33 நிமிடத்தில் ஒரு ரைஸ் மில் முதலாளி போனில் பேசும் காட்சி. அதில் பின்புலத்தில் ரைஸ் மில் என்று எழுதப்பட்ட காலண்டர் வைத்துள்ளனர். அடுத்து
1.50நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரி மக்கள் குறை கேட்கும் கூட்டம் ஒரு தொண்டு நிறுவன நிறுவன கட்டிடத்தில் நடத்துகிற காட்சி. அந்த காட்சியில் குமர விகடன் காலண்டர் வைத்துள்ளனர். இது கல்யாண மண்டபங்கள் ஆரம்பித்து சமுதாயக் கூடங்கள் வரை இருக்கக் கூடிய பொதுவான காலண்டர். அடுத்து 2.14 நிமிடத்தில் போலிஸ் உயர் அதிகாரிகள் பேசிக் கொள்ளும் காட்சி. அதில் வைக்கப்பட்டுள்ள காலண்டரில் இருக்கும் சின்னம் முக்கியம். அது indian police service சின்னம். ஆக எந்த இடத்தில் என்ன காலண்டர் வைக்க வேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டுள்ளனர் ஜெய்பீம் சூர்யா ஞானவேல் குழு.
அடுத்து 2.04 நிமிடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த காட்சியில் கொடூரமான ஈவு இரக்கம் இல்லாத ஒரு போலிஸ் வீட்டில் உள்ள காலண்டர் வன்னிர் சமூகத்தைப் பிரதிபலிக்கும் அக்னி கலசம். தற்போது அது இந்து கடவுளான லட்சுமி தேவி காலண்டர் மாற்றியுள்ளனர். ஆக சரியான திட்டமிட்டலுடனே வைத்துள்ளனர் காலண்டர்களை’’ எனப் பதிவிட்டு உள்ளார்.
திட்டமிட்டு வன்னியர் மீது வன்முறையாளர்கள் என பொய்புனையவே திட்டமிட்டு காட்சி படுத்தப்பட்ட படம்.அந்த விஷயத்தை அந்த சமூகமே மறந்துட்டாலும் கொளுத்திப் போட்டுட்டே இருந்து சண்டை மூட்டி விட்டுட்டே இருக்கணும். அதான உன் எண்ணம்? என மாரிதாஸின் பதிவுக்கு எதிராகவும் கருத்துகள் குவிந்து வருகின்றன.
