டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை மாநில் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதே போல் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகின்றன.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில அதிரடி திட்டங்களை வகுத்துள்ளார். பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை எடப்பாடி விரைவில் வெளியிட உள்ளார்.


அண்மையில் நடந்த முதலமைச்சர்  குறைதீர் முகாமில் எடப்பாடி  பழனிசாமி, மனுக்களை பெற்றார். அதில் பெரும்பாலான மனுக்கள், முதியோர் பென்ஷன் கேட்டு வந்துள்ளது. இதனையடுத்து, அனைத்து கிராமங்களிலும், ஒரு மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும் படி, வருவாய் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

60 வயதானவர்கள் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களாக இருப்பதால், அவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா மீது மரியாதை இருக்கும். எனவே, சரியானவர்களுக்கு பென்ஷன் வசதி செய்து கொடுப்பதன் மூலம், இரட்டை இலைக்கு ஓட்டுகளை அள்ள முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.