Age limit increase for TNPSC Group 1 Selectors
டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வாளர்களுக்கான வயது வரம்பு உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு எழுதும் தேர்வாளர்களுக்கான வயது வரம்பை உயர்த்தி அறிவித்தார்.
அதன்படி, எஸ்.சி, எஸ்.டி., தேர்வாளர்களுக்கு 35 வயதில் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டதாக கூறினார். மற்ற பிரிவினருக்கு 30 வயதில் இருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த வயது வரம்பு மாற்றம் குரூப் 1, குரூப் 1ஏ, குரூப் 1பி தேர்வை எழுதுவோருக்கு பொருந்தும் எனவும், டி.எஸ்.பி. துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் நிரப்பப்படும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பை உயர்த்தக்கோரி, பல்வேறு கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்ததால், இந்த அறிவிப்பு கொண்டு வரப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
