கடந்த ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததாக அறிக்கை வெளியானது.

சில நாட்கள் சீராக இருந்த ரத்த அழுத்தம் மீண்டும் குறைந்துகொண்டிருக்கிறது. அதோடு கல்லீரல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு மஞ்சள் காமாலையும் சேர்ந்து வந்திருக்கிறது. தற்போது உடல்நிலை சீராகி வந்த நிலையில் மஞ்சள் காமாலை வந்திருப்பதால் மீண்டும் சீரியசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  கட்சி வேலைக்காக  கும்பகோணத்திற்கு சென்ற ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அங்கு டெல்டா மாவட்ட திமுக முக்கிய புள்ளிகளை   சந்தித்ததோடு, தொழில்ட்ப பிரிவி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வந்தார். இந்நிலையில் தான் கலைஞருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளதை என்ற செய்தி சொல்லப்பட்டது. இதனால் தனது சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததாக அறிக்கை வெளியானது.

 மீண்டும் ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்தாலும், வயது முதிர்வுக்கு உள்ள பிரச்சனையால் இருக்கும் கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிக்கையில் கூறியிருந்தனர். 

இப்படி தீவிர கண்காணிப்புக்கு இடையில் கல்லீரல் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டதை அறிந்த காவேரி டாக்டர்கள், சென்னை குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் நோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் தலைவராக இருக்கும் டாக்டர் முகமது ரேலாவை வரவழைத்தனர். டாக்டர் ரேலா தற்போது கருணாநிதிக்கு கல்லீரல் தொடர்பான சிகிச்சை அளித்து வருகிறார்.

கல்லீரல் மருத்துவத்தில் உலகப் புகழ்பெற்ற தமிழக டாக்டரான முகமது ராலே தலைமையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 94 வயதுக்கு மேல் மஞ்சள் காமாலை வந்துள்ளதால் அதை கட்டுப்படுத்துவதில், மிகப்பெரிய சிரமங்கள் சவால்கள் இருப்பதாக டாக்டர் ராலே கவலையில் உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. முன்பு  பள்ளிக்கரனையிலுள்ள குளோபல் மருத்துவமனையில் பணியாற்றிவந்தவர் இவர்.  டாக்டர் ராலே சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் ஆவார்.

 இவர், நாகை மாவட்டம் மயிலாடு துறையை சேர்ந்தவர் ஆவார், குளோபல் மருத்துவமனையிலிருந்து திமுக பிரமுகரான ஜகத் ரட்சகன் இவரை அழைத்துச் சென்று இவரது பெயரியிலேயே மருத்துவமனை கட்டி நடத்தி வருகிறார். ஜெகத் ரட்சகன் மூலமாக கருணாநிதிக்கு டாக்டர் ராலேவை  வைத்து சிகிச்சை மேற்கோள்ளப்பட்டு வருகிறது. கடந்த முறை ஏற்பட்ட இக்கட்டான நிலைமையை வெற்றிகரமாக சமாளித்து மன உறுதியோடு மீண்டு வந்தாரோ அதேபோல் தொண்டர்கள் நம்பிக்கையோடு காத்துக்  கிடக்கின்றார்கள்.