தமிழகத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்து கிழித்து தொங்கவிடும் வைகோ, டெல்லிக்கு சென்று பாஜக மத்திய அமைச்சர்களுடன் நல்ல நட்பை தொடர்கிறார். திமுக கூட்டணியில் துண்டை போட்டு வைத்திருந்தாலும் பாஜக பாசத்தில் அவர் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசிய பின்னணி தற்போது வெளியாகி இருக்கிறது.

 

தமிழகத்துக்கு மோடி வந்தால் கருப்பு கொடி காட்டும் வைகோ திடீரென டெல்லி சென்று தமிழக அரசியல் நிலவரங்களை பா.ஜ.க சார்பில் கவனிக்கும் நிர்மலா சீதாராமஅனை சந்தித்து பேசினார். கடுமையாக பா.ஜ.கவை எதிர்த்து வரும் வைகோ திடீரென அந்த கட்சியின் முக்கிய தலைவரான நிர்மலாவை சந்தித்திருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பியது. மத்திய அமைச்சர்கள், நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்தன், சுரேஷ்பிரபு ஆகிய சிலரையும் அவர் சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

சந்திப்பை முடித்து, மதுரைக்கு வந்த வைகோ, மத்திய அமைச்சர்கள், தனக்கு நல்ல மரியாதை குடுத்ததை, தனது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்து புலங்காகிதப்பட்டுள்ளார். மக்களவையில் மோடி பேசிட்டிருந்த போது, தகவல் சொன்னதும், அங்கிருந்த நிர்மலா சீதாராமன், உடனே வெளியில் வந்து என்னை பார்த்துள்ளார்.

 

அப்போது கலிங்கப்பட்டி நண்பர் ஒருவரின் சிகிச்சைக்காக, நிர்மலா சீத்தாராமனிடம் ராணுவ ஹெலிகாப்டர் கேட்டதும், உடனே ஏற்பாடு செய்து கொடுப்பதாக வைகோவிடம் உறுதியளித்துள்ளாராம். ஓ.பி.எஸ் சகோதரர் உடல்நலமில்லாதபோது ராணுவ ஹெலிக்காப்டரை கொடுத்து உதவியுள்ளார் நிர்மலா சீத்தாராமன்.