After knowing JDS and Congress are in the verge of forming govt in Karnaraka

கர்நாடக தேர்தலில் கருத்து கணிப்புகள் கூறியதை போல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கததால்,
காங்கிரஸ் ஆதரித்தால் குமாரசாமிதான் முதல்வர் என்று கூறினார். சோனியாவின் இந்த ஆஃபரை தேவ கௌடா ஏற்றுக் கொண்டதை அடுத்து தேவ கௌடா கட்சியும் காங்கிரஸும் இணைந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆர்.ஆர்.நகர், ஜயநகர் ஆகிய இரு தொகுதிகளைத் தவிர 222 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்று காலை 8 மணி வாக்கில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் ஒரு மணி நேரத்துக்கு தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை நடந்தது. தபால் ஓட்டுகளில் காங்கிரஸும், பாஜகவும் இடையே கடுமையான போட்டியில் இருந்தன. தபால் ஓட்டுகள் என்று குறிப்பிடாமல் மின்னணு ஊடகங்களில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நெருக்கமான போட்டி நிலவுகிறது என்று செய்திகள் வெளியிடப்பட்டன.

ஆனால் ஒன்பது மணிக்கு மேல் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை முடிந்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் வாக்குகளை எண்ண ஆரம்பித்ததும் களம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. பாஜக மளமளவென பல தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது.
முதல்வராக இருந்த சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

இதில் அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியையே முக்கியமாகக் கருதினார். இந்நிலையில் சித்தாராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் சிடி தேவகவுடாவிடம் தோல்வி அடைந்திருக்கிறார். இது காங்கிரசைக் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதே நேரம் அவர் போட்டியிட இன்னொரு தொகுதியான பாதாமி தொகுதியில் முன்னணியில் இருந்தார் சித்தாராமையா. சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தாராமையாவை எதிர்த்துப் போட்டியிட்ட மதச்சார்பற்ற கட்சியின் வேட்பாளர் சிடி தேவகவுடா, “சித்தராமையா மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அவரது அணுகுமுறையும், அனாவசியமான பேச்சுகளுமே அவரைத் தோற்கடித்துள்ளன’’ என்கிறார் சிடி தேவ கவுடா. தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சித்தராமையா இன்று பகல் ஆளுநரைச் சந்திக்கிறார்.

பாஜகவின் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட எடியூரப்பா தான் போட்டியிட்ட ஷிமோகா மாவட்டத்திலுள்ள சிகர்புரா தொகுதியில் வசதியாக முன்னணியில் இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுவருவதை ஒட்டி இன்று மாலை எடியூரப்பா டெல்லி செல்வதாக இருந்த எடியூரப்பாவிற்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

இவ்வளவு நேரம் முன்னிலை வகித்து வந்த பாஜக கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பான்மையை இழந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 73; ஜேடிஎஸ் 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் யாருடைய ஆட்சி அமையும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சுமார் எழுபது இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களையும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அதற்கு ஆட்சி அமைக்க வெகு சில இடங்கள் தேவை என்பதே இப்போதைய நிலைமை இருக்கும் என கருத்துக் கணிப்பை போலவே ரிசல்ட்டும் வெளியானது.

இந்நிலையில், திடீரென டுவிஸ்ட் ஏற்பட்டதை அடுத்து தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கததால், இதையடுத்து கோவாவைப் போலவே கர்நாடகாவும் ஆகிவிடக்கூடாது என எண்ணிய ராகுல் உடனே சோனியாவிடம் ஆலோசனை நடத்தினாராம். இதனையடுத்து சோனியா காந்தி, தேவகௌடாவிடம் ஆதரவு கோரி போனில் ஆலோசனை செய்துள்ளார். அப்போது காங்கிரஸ் ஆதரித்தால் குமாரசாமிதான் முதல்வர் என்று கூறியிருந்த நிலையில். சோனியாவின் இந்த ஆஃபரை தேவ கௌடா ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார். இதன்பிறகு, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் இணைந்து ஆளுநர் வஜுபாய் ருடாபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றனர். இது தொடர்பாக தேவ கௌடாவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தைக்குப் பின் ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முழு ஆதரவளிக்கும் என குலாம் நபி ஆசாத் மற்றும் சித்தராமையா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.