After Kamal Haasan came into politics we should come up with politics and welcome him if he comes to politics

நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு அரசு குறித்து கருத்து கூற வேண்டும் எனவும் அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் எனவும் ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை எனவும் கமலஹாசன் அன்மை காலங்களில் விமர்சித்து வந்தார்.

அதன்படி தற்போது 3 டுவிர்களை பதிவு செய்துள்ளார். அதில், எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது எனவும், தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நடந்தால் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும், ஊழலில் இருந்து நாம் இன்னும் சுதந்திரம் பெறாத நிலையில் நாம் இன்னும் அடிமைகளே எனவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இதற்கு அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களும் நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன், நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு அரசு குறித்து கருத்து கூற வேண்டும் எனவும் அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் எனவும் தெரிவித்தார்.