ஜங்ஷன் என்ற குறும் படத்தை இயக்கி நடித்திருந்தார் நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய். அடுத்து விஜேவாக மாறி விஜய் ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறார் சஞ்சய்.

 

தமிழ் சினிமாவின் கலெக்சன் கிங்காக கொண்டாடப்படுபவர் விஜய். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ என்ற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் தனது அப்பாவைப் போலவே சினிமா துறையை தேர்வு செய்து ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக படித்து வருகிறார்.

சமீபத்தில் ஜங்ஷன் என்ற குறும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்திருந்தார். அதில் தன்னை ராகிங் செய்தவர்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இருமுகன், அரிமா நம்பி, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய  ஆனந்த் சங்கரை நேர்காணல் செய்யும் தொகுப்பாளராக ஜேசன் சஞ்சய் மாறி இருக்கிறார். அவருடன் உரையாடும் ஜேசன் சஞ்சய், ஆனந்த் சங்கரின் திரைக்கதை அமைப்பு உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து பதில் பெறுகிறார்.

இந்த வீடியோ யூடியூப்பில் பதிவேற்ற்ப்பட்டுள்ளது. சமீபகாலமாக யூடியூபில் இரண்டு வீடியோக்களில் தோன்றியிருக்கும் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் எப்போது கால்பதிப்பார் என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.