ஒரு கண்டக்டர் சமூக வலைதளங்களில் பல பெண்களோடு நட்புபாராட்டி பிறகு அந்த நட்பை காதலாக மாற்றி  அவர்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் கொடுத்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  32 வயதான மிலிந்த் அனில் ஜேட்,என்பவர்  ஒரு பஸில் கண்டக்டராக பணி புரிகிறார். அவர் தன்னுடைய பஸில் வரும் பல பெண்களோடு பேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற இணைதளங்கள் மூலம் வீடியோ காலில் பழகுவார். இந்த நட்பை கூடிய விரைவில் காதலாக மாற்றி அந்த பெண்களிடம் ஆசை வார்த்தை காட்டி உறவுக்கு அழைத்துச்செல்லுவாராம். அதன்பிறகு அந்த பெண்களை உறவு கொண்டதை வீடியோவாக எடுத்து ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பல லட்சம் சம்பாதித்திருக்கிறார்.இவர் விரித்த வலையில் சிக்கிய பல பெண்கள் ஏமாந்து போய் அவரிடம் உறவு வைத்திருக்கிறார்கள்.

இந்த விசயம் அவரால்  பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.அதன் பிறகு அந்த கண்டக்டரை போலீசார் விசாரித்த போது பல உண்மைகள் வெளி வரத்தொடங்கியிருக்கின்றது. 

கண்டக்டர் சொந்தக்கார பெண் மற்றும் ஒரு பிஸ்ஸா கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களை அவர்  இப்படி ஏமாற்றியுள்ளார் .அவர் இணையத்தில் சிவா வைஷாலி என்ற பெயரில் எக்ஸ்மாஸ்டரில் ஒரு கணக்கை உருவாக்கினார்.அதன் மூலம் அந்த பெண்களோடு பழகி அவர்களின் உறவு காட்சியை படமாக்கி அதை அந்த தளத்துக்கு விற்றுள்ளார் .அதற்கு அவர்கள் 5 லட்சம்  பணம் கொடுத்துள்ளார்கள் .இதை போல் அந்த ஆபாச தளத்துக்கு  63 க்கும் மேற்பட்ட ஆபாச காட்சிகளை கொடுத்துள்ளார் .மேலும் அவர் மீது ஏற்கனவே பல மோசடி புகார்கள் உள்ளன .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை விசாரித்து வருகிறார்கள்