இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொருளாதார வர்த்தக ஆய்வு மையம் பொருளாதார நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. இதற்காக, சர்வதேச செலாவணி நிதியம் வெளியிடும் அடிப்படை ஆதார புள்ளிவிவரங்களை கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் . பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், இந்தியா, 2019ம் ஆண்டில் பிரான்ஸ், இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி, 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்த 15 ஆண்டுகள், 3ம் இடத்திற்காக ஜப்பான், ஜெர்மனி, இந்தியா இடையே கடுமையான போட்டி நீடிக்கும்.

பிரதமர் மோடி, 2024ல் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 டிரில்லியன் டாலராக உயரும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை 2026ல் எட்டிவிடும். 

அப்போது, ஜெர்மனியை முந்தி 4வது இடத்திற்கு முன்னேறும். அதேபோல், 2034ம் ஆண்டில் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறும். 2033 வரை முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை சீனா முந்தாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.