after adi month dindkaran will be cm said dinakaran

ஆடி போயி ஆவணி வந்தால் இவங்க தான் "முதல்வராம்"...! இதற்கும் டோக்கனா...!?

ஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி கொடுப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார் டிடிவி தினகரன்.

அதாவது,18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக அடுத்த சில நாட்களில் தீர்வு வர உள்ள நிலையில்,டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களிடம் வாக்குறுதியை கொடுத்துள்ளார்.

அதாவது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தமக்கு சாதகமாக தான் தீர்ப்பு வரும் என்றும்,பின்னர் எடப்பாடி அரசை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, மாமியார் வீட்டிற்கு சென்றுவிடுவார் என தொடர்ந்து கூறி வருகிறார் தினகரன்

முதல்வர் பதவி

தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி நம்மிடம் தான் என பலமுறை கூறி வரும் தினகரன்,முதல்வர் பதவியை ஆதரவாளருக்கு தான் கொடுக்க உள்ளதாக கூறி வருகிறார்.

இவருடைய பேச்சை நம்பி,அவருடைய ஆதரவாளர்களும்,தற்போது தினகரன் புகழ் பாடி வருகின்றனர்.

அதே வேளையில் ஆர்கே நகர் இடை தேர்தலில்,20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டது போலவே, இதுவும் சும்மா தானோ என்று ஆதரவாளர்கள் ஒரு சிலர் பேசி வருகின்றனராம்

ஆக மொத்தத்தில், ஆடி போயி ஆவணி வந்தால் டாப்பா வருவாருன்னு சொல்ற மாதிரி 18 எம்எல் ஏக்கள் தகுதி நீக்கம்தொடர்பாக ஆதரவான தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்தால்,ஆட்சி அவருடையது தான் என்ற போக்கில் பேசி வருகிறார் தினகரன்.