Asianet News TamilAsianet News Tamil

28 ஆண்டுகளுக்கு பின் அதிமுகவில் விரிசல் – சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

after 28-years-admk-broken
Author
First Published Feb 17, 2017, 11:32 AM IST


கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தார். அப்போது, அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. ஜானகி மற்றும் ஜெயலலிதா என தனித்தனியாக முதலமைச்சருக்கு போட்டியிட்டனர்.

இதில் ஜானகி, முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைதொடாந்து 1988ம் ஆண்டு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, திமுக எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. திடீரென கை கலப்பும், கலவரமும் மூண்டது. பின்னர், 111 எம்எல்ஏக்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய அவை தலைவர் பி.எச்.பாண்டியன் ஜானகி அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

1988ம் ஆண்டுக்கு பின், தற்போது (2017) அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருக்கிறது.

கடந்த 2006 - 2011ம் ஆண்டு திமுவினல் 100க்கு குறைவான எம்எல்ஏக்களே இருந்தனர். ஆனால், அப்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. எந்த காரணத்தை கொண்டும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios