ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இப்படி குளிர்காய நினைத்த எதிர்கட்சிகளின் முகத்தில் கரியை பூசி ஒற்றுமையை நிலைநாட்டி இருக்கிறார்கள் இரட்டை அண்ணன்களான ஓ.பி.எஸும் - இ.பி.எஸும்.

 

இருவருக்குள்ளும் பிரச்னை என்றதும் எதிர்கட்சிகள் குட்டையை கிளப்பி அதிகாரத்தை பிடித்து விடலாம் என அரசியல் கணக்கு போட்டு வந்தன. ஆனால் உண்மையான அதிமுக தொண்டர்களுக்கோ இந்த விவகாரம் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. வாத்தியார் ஆரம்பித்த கட்சி... அம்மா வளர்த்த உருவாக்கிய ஆட்சி. இவர்களது சகோதர யுத்தத்தால் பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பது அவர்களது கவலை. அந்த கவலையை ஓ.பி.எஸ்-எடப்பாடி இருவரும் பேசிய ஒற்றை வார்த்தை உற்சாகப்படுத்தி விட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளட் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களே என்று கூறியதும் தொண்டர்கள் ஆரவாரத்துடம் முழக்கமிட்டனர். அதே போல் அதேபோல் ஓ.பிஎஸ் பேசும்போது , ‘’என் பாசத்துக்குரிய அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களே’’என்று கூறியபோது தொண்டர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.  

இந்த பாசத்துக்குரிய அண்ணன்கள் இணைந்ததை எதிர்கட்சிகளால் சீரணிக்க முடியவில்லை. அணைந்த நெருப்பில் பகை மூட்டக் கிளம்பி இருக்கின்றனர்.  ’அதிமுகவின் ஒற்றைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி மாற வாய்ப்புள்ளதாக’கூறவைத்து வேற்றுமையை விதைக்க முயற்சித்து வருகிறது. ‘வழிக்காட்டுதல் குழுவில் முதல் 6 பேர் அமைச்சர்கள். அனைவரும் ஈ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். மீதமிருக்கும் 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதிலிருந்து கட்சியின் பிடியும் ஆட்சியின் பிடியும் ஈ.பி.எஸ் கைக்கு போய் விட்டது. இதனை ஓ.பி.எஸ் எப்படி பார்க்கிறார் என தெரியவில்லை. கட்சியின் ஒற்றுமைக்காக தான் இப்படியே இருக்க ஓபிஎஸ் விரும்பினால் அதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இப்போதைக்கு கட்சியில் ஒற்றுமை இருக்கும். இதன் மூலம் அதிமுகவின் ஒற்றை தலைவராக ஈ.பி.எஸ் மாற வாய்ப்பு இருக்கிறது.

எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்ற போது , ஓபிஎஸ் பொது செயலாளராக இருந்திருந்தால் சம பலம் இருக்கும்.  ஆனால் ஓபிஎஸ் இப்போதும்  ஒருங்கிணைப்பாளர்தான். அதுபோக 11 பேர் உள்ள வழிகாட்டுதல் குழுவில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களை, எடப்பாடி இழுத்து விட்டால், ஓபிஎஸ் அதிகாரம் முழுதாக முடிந்து விடும்’’என தூபம் போட ஆரம்பித்துள்ளனர்.

 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ‘’அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளில் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளேன், எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது’’என்று நெத்தியடி பதிலடி கொடுத்தும் எதிர்கட்சிகள் வாலை சுருட்டிக் கொள்ளவில்லை.

 

அதிமுகவில் நடந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த விவகாரம் பல அதிமுகவுக்கு மறைமுகமாக பல நன்மைகளை விதைத்து இருக்கிறது. அதிமுக தொண்டர்கள் மத்தியில் தெளிவு கிடைத்திருக்கிறது. ஒதுங்கிக்கிடந்த தன் சமுதாய மக்களை  ஓ.பிஎஸ்- எடப்பாடி இருவருக்கும் நடந்த பலசாளி யார் என்கிற போட்டியில் அவர்களது சமுதாயத்தை சார்ந்த மக்களின் உணர்வுகளை தூண்டி தங்கள் பின்னால் அழைத்து வந்துள்ளனர். அதே போல் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்து அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான பங்குண்டு என்பதையும் ஆழப்பதிவு செய்துள்ளனர். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்களே... அது அதிமுகவில் நன்மயையாய் முடிந்திருக்கிறது. ஆக, இது இருவக்குமான வெற்றி.