Asianet News TamilAsianet News Tamil

‘பா.ஜனதா கட்சி விளம்பரத்துக்கு செலவு செய்த ரூ.3,775 கோடி வசூலியுங்கள்’... முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

advertisment expenses amount will be recovered from bjp..aravind gejriwal
advertisment expenses amount will be recovered from bjp..aravind gejriwal
Author
First Published Dec 10, 2017, 8:09 AM IST

விளம்பரத்திற்காக மத்திய அரசு செலவழித்த ரூ.3 ஆயிரத்து 775 கோடியை பா.ஜனதா கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.பதில்நொய்டாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வார், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 2014 ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை விளம்பரத்திற்காக மத்திய அரசு ரூ. 37 ஆயிரத்து 775 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

advertisment expenses amount will be recovered from bjp..aravind gejriwal

முதல்வரின் பதிலடி

இது தொடர்பாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியதாவது:

விளம்பரத்திற்காக ரூ.97 கோடி டில்லி அரசு செலவு செய்தது. இதனை ஆம் ஆத்மியிடமிருந்து வசூலிக்க கவர்னர் உத்தரவிட்டார். தற்போது, இந்த உத்தரவை பின்பற்றி ஏன் பா.ஜ.,விடமிருந்து ரூ.3 ஆயிரத்து 775 கோடியை ஏன் திருப்பி வசூலிக்கக்கூடாது?

advertisment expenses amount will be recovered from bjp..aravind gejriwal

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உத்தரவு
கடந்த மார்ச் மாதம் டில்லி அரசு விளம்பரத்திற்காக ரூ.97 கோடி செலவு செய்தது. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறியது எனக்கூறி கவர்னர் அனில் பைஜால், ஆம் ஆத்மியிடமிருந்து ரூ.97 கோடியை திருப்பி வசூலிக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்

 

Follow Us:
Download App:
  • android
  • ios