அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்சனை காரணமாக கட்சி பிளவுபட்டது. ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என ஒவ்வொருவர் தலைமையிலும் தனி தனி அணிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கட்சி நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார்? இவர்களின் யாருக்கு வாய்ப்பு?

அந்த வகையில் அண்மையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர். இதேபோல் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். 

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம்..! ஓபிஎஸ் உரிமை கோர தடை விதிக்க வேண்டும்..! செக் வைத்த எடப்பாடி

தொழில் நெருக்கடி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகேயனின் மனைவி கிருபாலினி அதிமுகவின் கோவை மாநகர மேயர் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.