Asianet News TamilAsianet News Tamil

லால்குடி வேட்பாளர் வாபஸ்; ஆசை காட்டி மோசம் செய்த அதிமுக.! பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

லால்குடி தொகுதியை கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதால், தங்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் ராஜாராம் வாபஸ் பெறப்பட்டுள்ளார்.
 

admk withdraws lalgudi candidate after allot that constituency to tmc
Author
Chennai, First Published Mar 11, 2021, 10:25 PM IST

அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்டன. ஆனால் அவ்வளவு தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது அதிமுக. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒருவழியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதன்படி, பட்டுக்கோட்டை, திரு வி.க.நகர், லால்குடி, தூத்துக்குடி, ஈரோடு கிழக்கு, கிள்ளியூர்  ஆகிய 6 தொகுதிகளை த.மா.காவிற்கு அதிமுக ஒதுக்கியது. இதில், லால்குடி தொகுதிக்கு ஏற்கனவே ராஜாராம் என்பவரை வேட்பாளராக அறிவித்திருந்தது அதிமுக. ஆனால் அந்த தொகுதி த.மா.காவிற்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ராஜாராமை வாபஸ் பெறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை மூலம் அறிவித்துள்ளனர்.

மேலும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடைநம்பியும், பெரம்பலூர் தொகுதியில் தமிழ்ச்செல்வனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மநாதபுரம் தொகுதிக்கு மட்டும் இதுவரை அதிமுக வேட்பாளரை அறிவிக்கவில்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios