பிரதமர் மோடி வேட்டி கட்டியது அதிமுக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் கேடி ராகவன் அதிரடியாக கருத்து கூறியுள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.  சீனா அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வந்திருந்தபோது இந்திய பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் சீனா அதிபரை வரவேற்ற அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது அத்துடன் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகைக்கு அதிமுக மிகவும் ஒத்துழைப்பு அளித்து வரவேற்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசும் மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டு பெற்றிருந்தது. இந்நிலையில் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்காட்சியின் மாநில பொதுச் செயலாளர் கேடி ராகவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் பிரதமர் மோடி வேட்டி கட்டியது அதிமுகவின் வெற்றியில் தாக்கத்தை  ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு உண்டு என தெரிவித்தார்.

 

பிரதமர் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பாரம்பரியத்தை பல சந்தர்ப்பங்களில் உலகறிய செய்யும்  முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அது அதிமுகவின் வெற்றிக்கும் தூண்டுகோலாக இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய்யான பிரச்சாரங்களை செய்து தமிழகத்தில் வெற்றி பெற்றது ஆனால் அதே சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி யால் வெற்றிபெற முடியவில்லை காரணம் திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்துகொண்டனர்.

அதனால் திமுக கூட்டணி வெல்ல முடியவில்லை என்றார். இந்நிலையில் அதிமுக பணபலத்தால் வெற்றி பெற்று விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது அது பணபலத்தால் பெற்ற வெற்றியா.?  என்பதை முதலில் கே எஸ் அழகிரி விளக்க வேண்டும் என்றார் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அரியானாவில் காங்கிரஸ் கட்சியினுடைய வாக்கு சதவீதம் சரிந்துள்ளது அது குறித்து கட்சி மேலிடம் ஆய்வு செய்யும் என்றார்.