அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் முன்பு  எப்போதும் இல்லாத அளவுக்கு சாதி ரீதியிலான உரசல்கள் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் சில முக்கிய தொழிலதிபர்கள் சென்னையில் ஒரு இடத்தில் கூடி கொங்கு மண்டல அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பணம் கொழிக்கும்  முக்கிய துறைகள் எல்லாம் முதலமைச்சரின்  சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம் தான் இருக்கின்றன  என்றும், இதை இப்படியே விட்டால் நமக்கு எதிர்காலமே இருக்காது என்று ஆரம்பித்து அந்த கூட்டத்தில் பயங்கர கடுப்பாகியுள்ளனர் அமைச்சர்கள்..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் கைகளில்தான் முழு அதிகாரமும் உள்ளதாக  அவர்கள் கொந்தளிதுள்ளனர். முன்பு அவர்களது துறைகளில் மட்டுமே கோலோச்சிய அந்த அமைச்சர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் தங்கள் அதிகாரத்தைத் காட்டத் தொடங்கியுள்ளதால் மற்ற அமைச்சர்கள் நொந்து போயுள்ளனர்.

இதே போல் அந்த கொங்கு மண்டல அமைச்சர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு  சிலர் மாவட்ட அளவிலும்  சிலர் மொத்த ஒப்பந்த பணிகள்,  பணி நியமனங்கள், பணி மாறுதல்களை போன்றவற்றை முடிவு  செய்கிறார்களாம் இதற்கு அதிகாரிகள் முழு அளவில் ஒத்துழைப்பு தருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் கையைப் பிசைந்து நிற்கிறார்கள்.

இந்த கொங்கு அமைச்சர்களின் அதிகாரத்தால்  வருவாய் இல்லாமல் போவதுடன் கட்சிகளுக்குள் சொந்த மாவட்டத்திலேயே மரியாதை இல்லை என்றும் அவர்கள் புலம்பியுள்ளனர்.

தற்போதுள்ள அமைச்சர் பதவிக்கு பல கோடிகளை கொட்டித்தான் வந்திருக்கிறோம் என்றும், இதையெல்லாம் எப்படி திருப்பி எடுப்பதும் என்றும் அநத் அமைச்சர்கள் புலம்பியுள்ளனர்.

தற்போது  இந்த ஆட்சி எப்போது கவிழும் என்றே தெரியாத நிலை அதையெல்லாம் எப்போது திரும்பி எடுப்பது என்றும் கொந்தளிக்கிறார்கள்.  இதையடுத்து  அந்த மூன்று அமைச்சர்கள் துறைகளில் எங்கு? எப்படி? ஊழல் நடைபெறுகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவும் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து உளவுத்துறை மூலம் தகவல் கிடைக்கவே அப்செட்டான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இபிஎஸ்க்கு எதிரான மனநிலையில் உள்ள அமைச்சர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாகவும், அதனால் ஒரு நெருக்கடியான சூழல் ஓடிக் கொண்டிருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.