திமுக கூட்டணிக்காக பாமக காத்திருக்கும் நிலையில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க பாமகவை வருக வருக என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

 

கூட்டணி குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூட்டணிக்காக எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. திமுக, அமமுக தவிர யாரும் கூட்டணிக்கு வரலாம். அவர்கள் அனைவரும் வருக வருக. குக்கர் சின்னம் தினகரனுக்கு வழங்க கூடாது என அதிமுக எதிர்ப்பதற்கான காரணம், அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு பொதுவான சின்னத்தை சட்டப்படி ஒதுக்க இயலாது என்பதற்காகவே.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் சரிசெய்யப்படும். அதிமுக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயராக இருக்கிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முழுமையாக முடிந்த பின் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். பாஜக உடன் கூட்டணி அமைக்க எந்த நிர்பந்தமும் இல்லை. 

அமமுக, திமுக தவிர பாமக உட்பட யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம்’’ என்று அவர் தெரிவித்தார். திமுக கூட்டணிக்காக பாமக காத்திருக்கும் நிலையில் ஜெயக்குமார் பாமகவை கூட்டணிக்கு அழைத்திருக்கிறார்.