தமிழக அரசியலில் இரண்டு விஷயங்கள் யாரும் மறுக்க முடியாது. வைகோவுக்கு கட்சி ரீதியாக அதிமுக , திமுக போல் செல்வாக்கு இல்லை என்றாலும் அவரது தொடர்புகள் எந்த நிலை வரையும் செல்லும் எனபதை யாரும் மறுக்க முடியாது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மற்றொன்று என்னதான் மாற்று கருத்துகள் , எதிர்ப்பு அரசியல் இருந்தாலும் வைகோ ஜெயலலிதா இடையே உள்ள தனிப்பட்ட நட்பு பாசம் அளவிட முடியாதது. ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சித்தாலும் ஜெயலலிதாவின் மீது தனிப்பட்ட மதிப்பு , பாசம் வைத்திருப்பவர் வைகோ. இதே போல் மற்ற கட்சித்தலைவர்களை மதிப்பது போல் வைகோவை ஜெயலலிதா பார்த்ததில்லை. 

இவை இரண்டையும் தமிழ்நாட்டு அரசியலை அறிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள். அதிமுக அரசுக்கு பிரச்சனை அதிக அளவில் கிளம்புகிறது என்பதற்காக மதுவிலக்கு பிரச்சனையில் சற்று அடக்கி வாசித்தார் வைகோ என்ற காருத்து அனைவரிடமும் உண்டு.

அதையும் தண்டி வைகோ அதிமுக பி டீமாக செயல்பட்டார் என தேர்தல் நேரத்தில் திமுகவினர் கிளப்பி விட்டனர்.அது மக்கள் நலக்கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்ததான் எனபது அதவிர அதில் உண்மை இல்லை என்பது கிளப்பி விட்டவர்களுக்கே தெரியும்.

அதிமுக எதிர்ப்பு அரசியலை வைகோ கையில் எடுக்க கூடாது எனபதற்காகவும், சாதிகப்பாட்சா மரணத்தில் வைகோ திடீரென தேர்தல் நேரத்தில் பிரச்சனை கிளப்பியதற்காகவும் பதிலடியாக வைகோ மீது அப்படி ஒரு பிரச்சனை கிளப்பபட்டது. அதற்கு வைகோ இரையானார். அவர்கள் கிளப்பிய பிரச்சாரத்துக்கு பதில் சொல்லவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

ஆனாலும் வைகோவின் அரசியல் என்பது எப்போதும் தனிப்பாணி தான். தற்போது முதல்வர் உடல் நிலை சர்யில்லாத நிலையில் மத்திய அரசு அதை பயன்படுத்த நினைப்பதும் , சுப்ரமணியம் சுவாமி போன்றவர்களை விட்டு அறிக்கை விட சொல்வதும் என அதிமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர். 

இதனால் அதிமுக கட்சிக்குள் சிறிது சலசலப்பு தோன்றினாலும் அதை மத்தியில் ஆளும் பாஜக பயன் படுத்த முயற்சி செய்யும் என்பது தமிழக அரசியலையும், பாஜகவின் முந்தைய அரசியலை அறிந்தவர்களுக்கும் தெரியும் இந்த நிலையில் இதன் போக்கு பற்றி அறிந்த வைகோ தற்போது அதிமுக அரசை காக்க தன்னால் இயன்ற பணியை செய்ய வேண்டும் என களத்தில் குதித்ததாக கூறப்படுகிறது. 

அப்போலோ மருத்துவமனைக்கு 11.15 சென்ற வைகோ உள்ளே இருந்த நிமிடங்கள் 60 . இதில் ஜெயலலிதா உடல் நிலை பற்றி பேசிய அவர் மத்திய அரசின் நிலை பற்றியும் அதிமுக அரசுக்கு எப்படி நெருக்கடி வரும் என்பது பற்றியும் எப்படி இந்த விஷயத்தை அணுகுவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கவர்னரின் நெருக்கடி பற்றி அப்போது கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தனது தகுதி மீறி அமைச்சர்களை அழைத்து கவர்னர் பேசியதை மனாதில் வைத்திருந்த வைகோ இது பற்றி நான் கவர்னரிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு நேரடியாக கவர்னரை பார்க்க சென்றார். ஏற்கனவே வாஜ்பாயின் செல்லப்பிள்ளையாக வைகோ இருந்த காலத்தில் சாதாரண இணையமைச்சராக இருந்தவர் வித்யாசாகர் ராவ்.

அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள் என்பதால் கவர்னரை பார்க்கும் அனுமதி உடனே கிடைக்க ராஜ்பபவன் சென்றார் வைகோ. அங்கு அதிமுக அரசின் நிலை பாடு பற்றி பேச சுப்ரமணியம் சாமியின் நெருக்கடி பற்றி வித்யாசாகர் ராவ் கூறி மேலிருந்து நெருக்குவதாக கூறியுள்ளார்.

அப்போது முதல்வர் கருணாநிதி போரூர் மருத்துவமனையில் 45 நாட்கள் சிகிச்சையில் இருந்த போது இலங்கை பிரச்சனை பெரிதாக வெடித்து கிளம்பி போராட்டம் நடந்தது. உயர்நீதிமன்றத்தில் வரலாறு காணாத மோதல் ஏற்பட்டது. அப்போது யாரும் வேறு முதல்வரை கேட்க வில்லை. ஸ்டாலின் தான் நிர்வாகத்தை பார்த்து கொண்டார்.

ஆனால் தற்போது 16 நாள் தான் ஆகிறது எந்த பிரச்சனையும் இல்லாமல் அரசு நடக்கிறது , தேவையில்லாமல் நெருக்கடி கொடுப்பதை யாரும் ஏற்றுகொள்ள மாட்டார்கள் பாஜகவுக்கு வீண் கெட்ட பெயர்தான் ஏற்படும் என்று கூறியுள்ளார். 

சரியான நேரத்தில் அதிமுகவின் மீதான நெருக்கடியை மத்திய அரசு கொடுப்பதை தடுக்க வைகோ களத்தில் குதித்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர். - முத்தலீஃப்