admk target for parliment and condemned the stalin
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறப்பதற்கு மோடி, ஜனதிபதி, ஆளுநர் வராததற்கு காரணம் அவர் குற்றவாளி என்பதால் தான் எனவும் இந்த லட்சணத்தில் பாரளுமன்றத்தில் ஜெ படத்தை திறப்போம் என அமைச்சர் ஜெயக்கூறுவது சரியா என்று விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கினர்.
ஜெயலலிதாவின் 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட முழு உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உருவப்படத்தின் கீழே அமைதி, வளம், வளர்ச்சி என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதிமுகவினரின் இத்தகைய செயலுக்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு செய்தனர். பேரவையில் எதிர்க்கட்சியினர் இருக்கைகளில் அதிமுக எம்.பி.,க்கள் அமர வைக்கப்பட்டனர்.
இதனிடையே ஜெயலலிதா புகைப்படத்தை சட்டப்பேரவையில் அல்ல பாராளுமன்றத்திலேயே திறப்போம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை திறப்பதற்கு மோடி, ஜனதிபதி, ஆளுநர் வராததற்கு காரணம் அவர் குற்றவாளி என்பதால் தான் எனவும் இந்த லட்சணத்தில் பாரளுமன்றத்தில் ஜெ படத்தை திறப்போம் என அமைச்சர் ஜெயக்கூறுவது சரியா என்று விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
