admk taking cae of bridjos children education said ops

மீனவர் பிரிட்ஜோவின் குழந்தை படிப்பு செலவை அதிமுக ஏற்றுக்கொள்ளும் – ஒபிஎஸ் உருக்கம்...

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தங்கச்சி மடத்தில் போராடி வரும், மீனவர்களுக்கு தங்கள் ஆதரவை ஒபிஎஸ் நேரில் சென்று தெரிவித்தார் .பிரிட்ஜோவின் தாய் மற்றும் சகோதரர்கள் ஆகியோரிடம் தரையில் அமர்ந்து நீண்ட நேரம் பேசி ஆதரவு தெரவித்தார் .

6 ஆவது நாளாக தொடர்ந்து போரடி வரும், பிரிட்ஜோவின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஒபிஎஸ், பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலையும் தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஒபிஎஸ் சுட்டுக்கொள்ளப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் குழந்தை படிப்பு செலவை அதிமுக ஏற்கும் என உருக்கம் தெரிவித்தார். மேலும், மீனவர்களுக்காக நிரந்தர தீர்வு காண, மத்திய அரசிடம் மீண்டும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும், விரைவில் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் ஒபிஎஸ் தெரிவித்தார் .

தமிழகம் முழுவதும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒபிஎஸ், தற்போது ராமேஸ்வரத்திலும் மக்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.