ADMK symbol case the ops team has filed additional documents

இரட்டை இலை சின்னம் வழக்கில், தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்து சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக செயல்பட்டு வந்தது.

இரு அணிகளுமே, நாங்கள்தான் உண்மையான அதிமுக எனவும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்குதான் ஒதுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன.

இதையடுத்து தேர்தல் ஆணையம் விசாரணை முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

இதை தொடர்ந்து ஒ.பி.எஸ் அணியினர் தங்களுக்கு 40 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு தெரிவிப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்திருந்தனர்.

மேலும் 6,500 பக்க ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் பன்னீர் அணிக்கு ஆதரவாக 1.25 லட்சம் அதிமுகவினர் கையெழுத்து வாங்கிய கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே சசிகலா அணியும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.