admk spokes person singamuthu
அதிமுகவில் குடும்ப ஆட்சி கிடையாது என்ற அக்கட்சியின் பேச்சாளரும் நடிகருமான சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சிங்முத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் விரைவில் திரும்பி வர வாய்ப்புண்டு..பிளவுபடுத்தும் நோக்கத்தில் பன்னீர்செல்வம் செயல்படுகிறரார்.

இந்த சதிகளை முறியடித்து தமிழகத்தில் மீண்டும் அமைதி திரும்பும்... முன்னாள் முதல் அமைச்சர் ஜெயயலிதா வகுத்த வழியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைவரும் ஒன்று பட்டு செயல்படுவதே பொதுச் செயலாளர் சசிகலாவின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சிறகடித்து பறந்து வந்த அதிமுக பேச்சாளர்கள், தற்போது வேடந்தாங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளைப் போல சுதந்திரம் பெற்று விட்டனரோ.
