Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியை கலைக்க ஸ்டாலின் போடும் பகீர் திட்டம்... ஓங்கி பதிலடி கொடுக்கத் தயாரான எடப்பாடி..!

அடுத்த அஸ்திரமாக திமுக வம்பிற்கிழுத்தால் குட்கா வழக்கை தோண்டியெடுத்து திமுகவின் 21 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

ADMK Ready to retaliate for DMK
Author
Tamil Nadu, First Published May 28, 2019, 4:30 PM IST

தேர்தலில் அமமுக தோல்வியை சந்தித்துள்ளதால் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி மூவருமே அதிமுகவுக்கே ஆதரவு அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வெற்றி பெற்ற 9 பேர், சபாநாயகருடன் சேர்த்து சட்டமன்றத்தில் ட் அதிமுகவின் பலம் 123. இந்த எண்ணிக்கையால் அதிமுக ஆட்சிக்கு பாதிப்பில்லை. ஆனாலும் திமுக  உறுப்பினர்களின் எண்ணிக்கை  109. கிட்டத்தட்ட தொட்டு விடும் தூரம் தான். ADMK Ready to retaliate for DMK

அதிமுக ஆட்சியை கவிழ்க்க அக்கட்சி எம்எல்ஏக்களிடம் திமுக பேரம் பேசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுக்தியை திருப்பியடிக்க அதிமுகவும் கையாள உள்ளது. குறைந்தபட்சம் 10 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தால்கூட அது அதிமுகவுக்கு பின்னாளில் பலமாக இருக்கும் எனக் கணக்குப்போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. வாரிசுகளுக்கு சீட் தந்தது, மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் விட்டது என திமுகவில் சிலர் அதிருப்தியில் உள்ளனர். ADMK Ready to retaliate for DMK

இப்படி அதிருப்தியில் உள்ள திமுக எம்.எல்.ஏக்களுக்கு குறி வைத்திருக்கிறது அதிமுக.  போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய பிரச்சனையில், திமுக எம்எல்ஏக்களின் ஊதியத்தை வாங்க மாட்டோம் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை பெரும்பாலான திமுக எம்.எல்.ஏ.,க்களே விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களையும் வலைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ADMK Ready to retaliate for DMKADMK Ready to retaliate for DMK

அடுத்த அஸ்திரமாக திமுக வம்பிற்கிழுத்தால் குட்கா வழக்கை தோண்டியெடுத்து திமுகவின் 21 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். குட்கா பொட்டலங்களை பேரவையில் பிரித்து காட்டிய திமுக எம்.எல்.ஏ.,க்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்தால் பாதிப்பு திமுகவுக்கே. ஆகையால் அதிமுக ஆட்சி முழுமையாக இரண்டாண்டுகள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios