Asianet News TamilAsianet News Tamil

அதிமுக அவைத் தலைவர் நாளை டெல்லி பயணம்... பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!!

பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதத்தை தேர்தல் ஆனையத்திடம் ஒப்படைக்க நாளை அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

admk presidium chairman visit delhi tomorrow and handing over the letter of general committee members to the ec
Author
First Published Feb 5, 2023, 9:48 PM IST

பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதத்தை தேர்தல் ஆனையத்திடம் ஒப்படைக்க நாளை அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, இரு தரப்பில் இருந்தும் தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: திமுகவின் விடியல்!.. இலையை எந்த ஆடு சாப்பிடுகிறது - வெளுத்து வாங்கிய நாம் தமிழர் காளியம்மாள் !

அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்பில் செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்துள்ளார். இதை அடுத்து இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் தற்போது குழப்பம் நீடித்து வருகிறது.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி குழம்பி போன குட்டை... கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!!

இதுக்குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, சுமார் 85 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதை அடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதத்தை தேர்தல் ஆனையத்திடம் ஒப்படைக்க நாளை தமிழ் மகன் உசேன் டெல்லி புறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios