வேலூர் தொகுதியைப் பொறுத்தவரை திமுக - அதிமுகவுக்கு சமமான செல்வாக்கு உள்ளது. இரு கட்சிகளுமே கடந்த காலங்களில் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றன. அதெல்லாம் ஜெயலலிதா காலத்தில் நடந்தவை. தற்போது அதே அளவுக்கு அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. 

 நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, வேலூரில் வெற்றி பெறுவதற்காக திமுகவுக்கு எதிராக 3 அஸ்திரங்களை ஏவியிருக்கிறது. அது அதிமுகவுக்கு பலன் தருமா?
 ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வென்றது. பணப் பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூரில் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தங்களுக்கு செல்வாக்குக் குறையவில்லை என்பதைக் காட்ட, வேலூர் தேர்தலில் வெற்றி பெறுவதைக் கெளரவ பிரச்னையாக அதிமுக கருதுகிறது. மேலும் இடைத்தேர்தல் பாணியில் இத்தேர்தலை அதிமுக எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாடாளுமன்ற தேர்தலில் திமுக அடைந்த வெற்றியைப்போல வேலூரிலும் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வேலூர் தொகுதியைப் பொறுத்தவரை திமுக - அதிமுகவுக்கு சமமான செல்வாக்கு உள்ளது. இரு கட்சிகளுமே கடந்த காலங்களில் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றன. அதெல்லாம் ஜெயலலிதா காலத்தில் நடந்தவை. தற்போது அதே அளவுக்கு அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் பெரும்பாலும் வெற்றி தோல்வியை முதலியார், வன்னியர், இஸ்லாமியர்களே நிர்ணயித்துவருகிறார்கள். இந்தச் சமூகங்களைச் சார்ந்த மக்களே இத்தொகுதியில் அதிகம் நிறைந்துள்ளனர்.


இந்த மக்களின் வாக்குகளைப் பெறும் வண்ணம் அண்மையில் பல்வேறு முயற்சிகளை அதிமுக எடுத்திருக்கிறது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஏ.சி. சண்முகம் முதலியார் சமூகத்தைச் சார்ந்தவர். அந்தவகையில் முதலியார் சமூகத்தினர் வாக்குகள் கிடைக்கும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. மேலும் சட்டப்பேரவையில் அண்மையில் தமிழகத்தில் இடைக்கால முதல்வராக இருமுறை பதவி வகித்தவரும், நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்டவரும், அண்ணாவால், ‘தம்பி வா, தலைமை ஏற்க வா..’ என்று அழைக்கப்பட்டவருமான நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.
நெடுஞ்செழியனின் நுற்றாண்டு பிறந்த நாள் பற்றி துரைமுருகன் எழுப்பிய கேள்விக்குதான் பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். முதலியார் சமூகத்தினரின் வாக்குகளைக் கவரம்விதமாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல சட்டப்பேரவையில் தியாகி ராமசாமி படையாச்சியார் திருஉருவப் படத் திறப்பு விழா நடைபெற்றது. வேலூரில் நிறைந்துள்ள வன்னியர் சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் விதமாக படத்திறப்பு விழா நடைபெற்றது என்ற முணுமுணுப்பு அரசியல் அரங்கிலும் எதிரொலித்தது.