Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவை வெளியே எடுப்பது... அமமுக, அதிமுகவை இணைப்பது... பொதுச் செயலாளராக நிர்மாணிப்பது!

சசிகலாவை வெளியில் எடுப்பது, அதிமுக, அமமுகவை இணைப்பது, மற்றும் பழையபடியே சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக நிர்மாணிப்பது போன்ற அடுத்தடுத்து தமிழக அரசியலில் நிகழப்போவதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. 

ADMK Plan for bail sasikala from Jail
Author
Chennai, First Published Apr 25, 2019, 12:47 PM IST

சசிகலாவை வெளியில் எடுப்பது, அதிமுக, அமமுகவை இணைப்பது, மற்றும் பழையபடியே சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக நிர்மாணிப்பது போன்ற அடுத்தடுத்து தமிழக அரசியலில் நிகழப்போவதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. 

அதிமுக தன்னை வெளியில் அனுப்பியதால் தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சியைத் தொடங்கிய தினகரன், சிறையிலுள்ள சசிகலாவை பொதுச்செயலாளராக்கி, துணைப்பொதுச்செயலாளராக தன்னை காட்டிக்கொண்ட அவர்,  தற்போது அமமுகவை தனிக்கட்சியாக பதிவுசெய்து பொதுச்செயலாளர் ஆகிவிட்டார்.

கட்சியை பதிவுசெய்யுமுன் பொதுச்செயலாளர் சசிகலாதான், நான் துணை பொதுச்செயலாளர்தான் எனக்கூறிய தினகரன் தற்போது சசிகலா தலைவர், நான் பொதுச்செயலாளர் என அப்படியே மாற்றிவிட்டார். சட்ட பிரச்சனைகளை கணக்கில் கொண்டுதான் நான் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறேன் எனவும் கூறினார். சசிகலாவை வெளியே எடுப்பதற்கான வேலைகளும் நடந்துவருவதாக கூறுகின்றனர்.  

ADMK Plan for bail sasikala from Jail

இது ஒருபுறமிருக்க, முதலிலிருந்தே எடப்பாடியும், பன்னீர்செல்வமும் தினகரனை ஒருபோதும் கட்சியில் இணைக்கமாட்டோம், அவரை சார்ந்தவர்களை இணைத்துக்கொண்டாலும், அவரை மட்டும் சேர்த்துக்கவே மாட்டோம் எனக்கூறினர். தற்போது நடைபெற்ற பிரச்சாரங்களிலும் தினகரனைத் தாக்கிப் பேசினார்கள். ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி எடப்பாடியும் - பன்னீரும், சசிகலா குறித்து பேசவில்லை. எடப்பாடியை கூவத்தூரில் வைத்து முதல்வராக்கியதே சசிகலாதான் என்பதால். அவர் இன்றும் அந்த நன்றியுடன் இருக்கிறார் என்றும், அதனால்தான் அவர் சசிகலா குறித்து பேச மறுக்கிறார் என்றும் எடப்பாடி ஆதரவு, கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். 

ADMK Plan for bail sasikala from Jail

அதுமட்டுமில்லாமல் இந்தத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை மொத்தமாக சிதைப்பது அமமுகதான் என அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு எழுந்துள்ளது. அப்படி ஒருவேளை அதிமுகவின் வாக்கை அமமுக அதிகமாக பிரித்தால், அதைத்தொடர்ந்து சசிகலாவை வெளியில் எடுப்பது, அதிமுக, அமமுகவை இணைப்பது, பழையபடியே சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக நிர்மாணிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என சொல்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் தெரியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios