அதிமுக மக்கள் கட்சி, இங்கு எளியவர் கூட முதலவராக பதவிக்கு வரலாம் என மைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் மீன்வளத்துறை, பால்வளத்துறை, கால்நடை துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’நாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக அமைந்துள்ளது. அதிமுக அதிமுக மக்கள் கட்சி, இங்கு எளியவர் கூட முதலவராக பதவிக்கு வரலாம். ஆனால், திமுக மன்னர் கட்சி, அங்கு வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வரமுடியும்’’ என அவர் தெரிவித்தார்.

திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்தே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார். ஆனால், திமுகவினரோ, தனது மகனுக்கு இருமுறை எம்.பி சீட் வாங்கிக் கொடுத்த ஜெயகுமார் வாரிசு அரசியலை பற்றி பேசலாமா? என பதிலடி கொடுத்து வருகின்றனர்.